Published Date: August 1, 2025
CATEGORY: CONSTITUENCY

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 பெரியார் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சுற்றுலா அரங்கில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா ஆகியோர் தலைமை வகித்தனர். மேயர் இந்திராணி முன்னிலை வகுத்தார்.
இம்முகாமை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் துறை சார்ந்த அரங்குகளில் மனுக்கள் பதிவு செய்வது பார்வையிட்டு மனுதாரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல்வர் பொதுமக்களில் குறைகளை வீட்டுக்கே தேடி சென்று கேட்டறிந்து தீர்வு காணும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
அதன்படி மதுரை மாவட்டத்தில் மொத்தம் 347 சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ள. இதுவரை நகரப்பகுதியில் 22 முகாம், ஊரக பகுதிகளில் 43 முகாம் என மொத்தம் 65 முகாம்கள் நடத்தப்பட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற 32 ,055மனுக்கள், பிற சேவைகளை பெற 27,373 மனுக்கள் என மொத்தம் 59,428 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 5320 மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.
இதில் துணை மேயர் நாகராஜன் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Media: Hindu Tamil